Wednesday, July 24, 2013

அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் கலாநிதி மஹ்மூத் கஸ்லான் அவர்கள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யிற்கு எழுதிய கடிதம்.

கலாநிதி மஹ்மூத் கஸ்லான் 

பாகம் - 02

கௌரவ தளபதி அவர்களே,

நீங்கள் உங்கள் நாட்டு மக்களையே கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்த போது உங்கள் உண்மையான முகம் வெளித்தெரிந்து விட்டது, அவர்கள் மிகவும் அமைதியாக தாம் தெரிவு செய்த ஜனாதிபதியை விடுவிக்குமாறு போராடிக் கொண்டிருந்தார்கள்.

 சுப்ஹ் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்களது நாட்டு சகோதரர்களையே கொல்லுமாறு நீங்கள் சொன்ன போது,  உங்களது மிருகத்தன்மையும் இரத்த வெறியும் வெளிப்பட்டது,  அந்த சோக நிகழ்வில் ஜம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்,  நூற்றுக் கணக்கானோர் காயப்பட்டார்கள், இன்னும் பலர் கைது செய்யப்பட்டு மிக மோசமாக நடாத்தப்பட்டார்கள்,  எந்தளவுக்கு எனின் ஒரு படைவீரர் ஒரு கைதியின் கழுத்தில் தனது சப்பாத்தை வைத்து மிதித்ததைப் பார்த்தோம்.

 ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விடலாம் என்றுதானே,  இவை அனைத்தும் செய்யப்பட்டன,  ஆனால்,  நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் எகிப்து மக்கள் பயத்தை மறந்து விட்டார்கள்,  அவர்களது சுதந்திரம் உயிரை விடவும் பெறுமதியானது என நம்புகிறார்கள்,  இனி ஒருபோதும் அவர்கள் இழிவடைய மாட்டார்கள்.

கௌரவ தளபதி அவர்களே,

உங்களை நினைக்கும் போது எனக்குக் கவலையாக இருக்கிறது அல்லாஹ் இதனை அறிவான் -  இந்தச் சதி,  ஏமாற்று. எத்தனையோ பேருடைய இரத்தம், இவை எல்லாவற்றுடனும் நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வைச் சந்திக்கப் போகிறீர்கள்?

உங்களால் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள்,  கணவனை இழந்த மனைவியர், அநாதைகளாக்கப்பட்டப் பிள்ளைகள்,  இவர்கள் அனைவரினதும் துஆக்களை எவ்வாறு தாங்கப் போகிறீர்கள்? மாத்திரமல்ல மில்லியன் கணக்கான மக்களின் துஆக்கள்,  எகிப்தினுள் மாத்திரமல்ல, முழு உலகிலுமுள்ள மக்களின் துஆக்களை எவ்வாறு தாங்கப் போகிறீர்களோ தெரியாது?

தளபதி அவர்களே,  

மக்கள் விரும்பும் ஒரு தளபதியாக நீங்கள் இருந்தீர்கள்,  இப்பொழுது மக்கள் வெறுக்கும் ஒரு கொலைக்காரனாக மாறி விட்டீர்கள்,  அதற்கான பழிக்குப் பழியை அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்,  இது விரைவில் நிகழும் என நினைக்கிறேன்.

இராணுவத்தின் பணி என்ன என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன், அரசியலில் தலையீடு செய்வது அதனது பணியல்ல என்று,  நீங்கள் பல தடவைக்ள் கூறியிருக்கிறீர்கள்,  ஆனால் உங்கள் எண்ணம் அதற்கு மாற்றமானது, நாட்டில் அரசியல் அதிகாரத்தின் மீது  மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை, சட்டபூர்வமாக யாப்பில் இணைத்துக் கொள்ள முயற்சி செய்தீர்கள், மக்கள் அதனை முறியடித்த போது,  பின்கதவு வழியாக அதனை சாதித்துக் கொண்டு விட்டீர்கள், இப்போது நீங்கள்தான் உண்மையில் ஆட்சியாளர்,  அதிலி மன்ஸுரும் ஏனையோரும் ஒரு திரை மாத்திரமே.

மக்கள் விருப்பம் என்ன என்பது எதுவித சந்தேகமும் இன்றி தெளிவாகி விட்டதாக உங்கள் உரையின் போது குறிப்பிட்டிருந்தீர்கள்,  மக்கள் விருப்பம் என்று நீங்கள் குறிப்பிடுவது,  தமர்ருத் இயக்கத்தின் கையொப்பங்களையும் ஜுன் 30 ஆர்ப்பாட்டத்தையும் தான்,  தமர்ருத் இயக்கம் உளவுப் பிரிவின் உற்பத்தி என்பதை பின்னர் ஊடகங்களே வெளிப்படுத்திவிட்டன,  அவர்கள் 22 மில்லியன் கையொப்பங்களைத் திரட்டியதாகக் கூறியது ஒரு மிகப் பெரிய பொய்யே அன்றி வேறில்லை, அவர்கள் கூறியதற்கு எந்த சான்றையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

 ஜுன் 30 ஆர்ப்பாட்டத்தை விடவும் பல மடங்கு மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகத் திரண்டிருந்தார்கள், அவர்களை அடக்கு முறையாலும் கொலையாலும் எதிர் கொண்ட நீங்கள்,  ஜுன் 30 ஆர்ப்பாட்டக் காரர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினீர்கள்,  அவர்கள் இஃவான்களது தலைமையகங்களைத் தாக்குவதற்கும் பள்ளிவாயல்களில் அத்துமீறுவதற்கும் மறைமுகமாகத் தூண்டுதலளித்தீர்கள்.

உண்மையில் அவர்களது கையொப்பங்களும் ஆர்ப்பாட்டங்களும் மக்கள் விருப்பத்தை அறிவதற்கான மிகச் சரியான விஞ்ஞான பூர்வமான அளவுகோள்கள் தானா? அல்லது அது ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையா?

இந்தத் தோற்றுப் போன அரசியல்வாதிகள் ஒரு தடவை உங்களிடம்,  இராணுவம் அரசியலில் தலையிட வேண்டும், எனக் கேட்டுக் கொண்ட போது, நீங்கள் தெளிவாகவே பதில் தந்தீர்கள், நான் எப்பொழுதும் சட்டபூர்வத் தன்மைக்குக் கட்டுப்படுவேன் என்றும் இராணுவத் தலையீட்டினால் எகிப்து பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போவதை விடவும் எகிப்திய குடிமகன்  ஒருவன் வாக்களிப்பதற்காக 15 மணி நேரம் வரிசையில் நிற்பது நல்லது என்று நீங்கள்தான் குறிப்பிட்டீர்கள்.

 அரசியலில் இராணுவதத்தின் தலையீட்டால் விழைந்த தீமையை நாம் 1967 அனர்த்தத்தில் கண்டோம். இராணுவம் தனது பணியை மட்டும் செய்யும் போது ஏற்படும் வெற்றியை 1973 யுத்த வெற்றியில் கண்டோம்.  நீங்கள் மக்கள் விரும்பம் என்ற போலியை முன்வைத்து நாட்டை எதனை நோக்கி எடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

No comments:

Post a Comment